Wednesday, October 24, 2012

பச்சை பட்டாணி சுண்டல்

  • ஊற வைத்த பச்சை பட்டாணி: 1 கப்
  • முளைக்கட்டிய பச்சைப் பயிறு: 1/2 கப்
  • இஞ்சி : 1 பெரிய துண்டு
  • பச்சை மிளகாய் : 1
  • மல்லித்தழை
  • உப்பு: தேவையான அளவு
  • தேங்காய் துருவியது : 2 மேஜைக்கரண்டி
  • கடுகு: தாளிக்க
  • கருவேப்பிலை:1 கொத்து
  • பெருங்காயம் : 1 பின்ச்





  • பச்சை பட்டாணி, பச்சைப்பயிறு இரண்டையும் குக்கரில் உப்பு,போதுமான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய் மிக்சியில் ஒரு சுத்து சுத்தி அரைக்கவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை,பெருங்காயம்,அரைத்த பச்சைமிளகாய் இஞ்சி கலவை, கொத்தமல்லி தழை,உப்பு சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி தேங்காய் சேர்த்து சிறிது வதக்கி வேகவைத்த பயிறு வகைகளைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கி வைக்கவும்.
  • சுவையான கிரீன் சுண்டல் தயார்.

மசாலா பட்டாணி

  • புடலங்காய் - 2
  • உருளைக்கிழங்கு - 1
  • பட்டாணி - 1/4 கப்
  • தக்காளி - 1
  • பெரிய வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி - சிறிதளவு
  • கறிவேப்பிலை - 1கொத்து
  • கொத்துமல்லி - 2 ஸ்பூன்
  • மஞ்சள் - 1/2 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • கடுகு - 1/4 ஸ்பூன்
  • எண்ணெய் - 3 ஸ்பூன்
  • உப்பு




  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன் சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள், தக்காளி சேர்த்து வதக்கி வேகவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து கிளறவும்.
  • புடலங்காயை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கி, மசாலாவை உள்ளே வைக்கவும்.
  • பின்னர் புடலங்காயை 15 நிமிடம் வேகவைத்து பரிமாறவும்.

அவரைக்காய் மசாலா

  • பட்டை அவரைக்காய் - 200 கிராம்
  • மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • மல்லி இலை - சிறிது
  • அரைக்க:
  • தேங்காய் துண்டு - ஒன்று(சிறியது)
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • தாளிக்க:
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • உளுந்து - அரை தேக்கரண்டி
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • பச்சைமிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி



 அவரைக்காயை சிறியதாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் நறுக்கி வைக்கவும்  தேங்காய், சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.  அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.  அரைத்த மசாலாவை போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கி அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டவும். அதில் அவரைக்காய், உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும். 
தண்ணீர் வற்றி காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான அவரை மசாலா ரெடி

அவரைக்காய் பொரியல்

  • பட்டை அவரைக்காய் - நூறு கிராம்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • முட்டை - ஒன்று
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • கடுகு - சிறிது


 அவரைக்காய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி தேவையானவற்றை எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெடித்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றி நன்றாக அவரைக்காய் வெந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
முட்டை அவரைக்காயில் நன்றாக படுமாறு எல்லா புறமும் பிரட்டி விட்டு வேக வைக்கவும்.
முட்டை அவரைக்காயுடன் ஒட்டி உதிரியாக வந்ததும் அடுப்பை நிறுத்தி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.

Friday, May 25, 2012

உலகின் முதல் மதம் இதுதானா...?

உலகின் முதல் மதம் இதுதானா...?

,
  இந்து மத வரலாற்று தொடர் 2
  ந்த ஒரு மனிதனை பார்த்தாலும் அவனைப் பற்றி உடனடியாக நமக்குள் எழும்பும் கேள்வி இவன் வயது என்னவாக இருக்கும் என்பதுதான்.  சாதாரணமான மனிதனின் வயதையே அறிந்து கொள்ளும் ஆர்வம் வரும் போது மதங்கள் போன்ற பெரிய பெரிய விஷயங்களை அறிந்து கொள்ளும் பொழுது இது எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்ற சிந்தனை வருவது தவிர்க்க முடியாததே ஆகும்.

 5,000 வருடங்களுக்கு முன்பு பாரசீகத்தில் தோன்றிய ஸ்ராஸ்திய மதத்திலிருந்து யூதர் ஹீபுரு மதம் தோன்றி அதிலிருந்து கிறிஸ்துவ மதம் தோன்றி கிறிஸ்துவத்தின் பெருவாரியான கொள்கைகளை சித்தாந்தங்களை உள்ளடக்கி இஸ்லாம் மதம் உருவாகி இன்று 1500 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.  இம்மதங்களுக்கு முன்னரே நமது இந்து மதம் தோன்றிவிட்டது.  அதாவது ஸ்ராஸ்திய மதம் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மதம் உருவாகிவிட்டது என்று சொல்லலாம்.


  பொதுவாக இந்து மதத்தின் தோற்றத்தை வேத காலத்திலிருந்து ஆரம்பிப்பதுதான் நம்முடைய வழக்கமான மரபு.  ஆனால் இந்து மதம் உண்மையில் வேதகாலத்தில் தான் தோன்றியதா அல்லது அதற்கு முன்னரே தோன்றிவிட்டதா என்று நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் சிந்திப்பது இல்லை.  காரணம் நமக்கு வேதகாலம் என்பதே எத்தனை வருடங்களுக்கு முற்பட்டது என்பது சரிவர தெரியாத போது அதற்கு முன்பே உள்ள காலத்தை எப்படி கணித்து பார்க்க முடியும்.  அப்படி முடியாது என்பதினால் காலங்களை அறிந்து கொள்ளும் நமது ஆர்வத்தையும் முயற்சிகளையும் கைவிட்டு விடமுடியுமா எனவே வேதகாலத்திற்கு முற்பட்ட காலத்தை அறிந்து கொள்ள நம்மால் முடிந்தவரை முயற்சி செய்து பார்ப்போம்.  அப்படி பார்த்தால் தான் இந்து மதத்தின் தொன்மையை நாம் உணர முடியும்.

 புவியியல் அறிஞர்கள் உலகத்தில் மனித இனம் தோன்றியது தென்னிந்தியாவில் தான் என்று சொல்கிறார்கள்.  இவர்களின் இந்த கூற்றுக்கு சில யூகங்கள் மட்டுமே ஆதாரமாக இருக்கிறதே தவிர அறிவியல் சார்ந்த அசைக்க முடியாத சான்றுகள் எதுவும் இது வரை கிடைக்கவில்லை இருந்தாலும் கூட நமது இந்திய நாட்டை பொறுத்த வரையில் மனித இனம் தோன்றியது தெற்கில் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் நமக்கு கிடைத்து உள்ளன.

 பல கோடி ஆண்டுகள் வயதுடைய முதுமையான கற்பாறை படிவுகள் தென்னிந்தியாவில் காணப்படுகிறது.  அப்பாறை படிவுகள் இருக்கும் பகுதிகள் காடுகளும் மலைகளும் சார்ந்த பகுதிகளாக இருப்பதினால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித சமூகம் வாழ்ந்திருக்க வேண்டும்.  எப்படியென்றால் இங்குதான் அதிக சிரமப்படாமல் மனிதர்கள் வேட்டையாடி மிருகங்களை உணவாக்கிக் கொள்ளவும் காய் கனிகளை பெற்றுக் கொள்ளவும் வாய்பிருந்திருக்கிறது.  மேலும் விந்திய மலை தொடருக்கு வடக்கே இன்று பரந்து கிடக்கும் கங்கை சமவெளியும் இமயமலை தொடரும் ஒரு காலத்தில் கடலுக்குள் மூழ்கி கிடந்திருக்கிறது. 


     இன்று கூட இமயமலை சிகரங்களின் உச்சியில் கடல்வாழ் உயிரனங்களின் படிமங்கள் படிந்திருப்பதை பார்க்கும் பொழுது இமயம் கடலுக்குள் தான் இருந்திருக்க வேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது.  வட இந்திய பகுதி கடலுக்குள் மூழ்கி கிடந்த காலத்தில் தென்னிந்தியா தான் உயரமாகவும் காடுகளும் மலைகளும் சூழ்ந்ததாகவும் இருந்திருக்க வேண்டும் அதனால்தான் மனித இனம் இந்தியாவை பொறுத்த வரை தெற்கில் தான் தோன்றியிறுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.  புவியியல் கணக்கு படி சுமார் ஐந்துகோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இமயமும், கங்கை சமவெளியும் கடலுக்குள்ளிருந்து வெளிவந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

 ஆக ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கன்யாகுமரியிலிருந்து தெற்கே நெடுந்தொலைவிற்கு நிலப்பரப்பு பரந்து கிடந்ததாகவும் அந்த பகுதிதான் லெமுரியா கண்டம் என்று ஒரு சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  முதன் முதலில் மக்களினம் லெமுரியா கண்டத்தில் தான் தோன்றியதாகவும் இன்று இலங்கையிலும் மேற்கிந்திய தீவுகளிலும் தென்னிந்தியாவில்  வாழக்கூடிய மக்கள் அந்த ஆதிமனிதர்களின் வாரிசுகள் என்று கருதப்படுகிறது.  அப்படி கருதுவதற்கு காரணமும் இருக்கிறது.  இந்த பகுதிகளின் நில அமைப்பு வாழும் மக்களின் உடலமைப்பு தோலின் நிறம் ஆகியவைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக காணப்படுகிறது.  இதுமட்டுமல்ல நியுஜிலாந்தில் வாழும் மேவா என்ற ஆதிமக்களின் மொழியமைப்பில் தமிழ்சொற்கள் பல இருக்கின்றன.  மேலும் மேற்கிந்திய தீவு மக்களின் சில பழக்க வழக்கங்களும் வழிபாட்டு முறைகளும் சின்னங்களும் சற்றேரக்குறைய தமிழ் மரபோடு ஒத்து அமைந்திருக்கிறது.

  போர்னியாவில் உள்ள ஆதி குடிமக்களான டயாப்புகளும் நமது ஆனைமலை பகுதியில் வாழும் காடர்கள் என்ற மலை சாதியினரும் ஒரே மாதிரியான வகையில் மரம் ஏறும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.  இது தவிர தென்னாப்பிரிக்காவில் உள்ள நீக்ரோக்களுக்கும் தமிழ்நாட்டு வனவாசிகளுக்கும் உருவத்திலும் நடை உடை பாவனையிலும் சமயச் சடங்குகளிலும் ஒற்றுமையிருப்பதை இன்றும் காணலாம்.  இலங்கை தமிழ் மக்களுக்கும் நமக்கும் உள்ள ஒருமைப் பாட்டை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 


   இவைகளையெல்லாம் வைத்துப்பார்க்கும் பொழுது விந்திய மலைத் தொடங்கி ஆப்ரிக்கா வரையில் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதை நம்பாமல் இருக்க முடியாது.  நமது பழந்தமிழ் இலக்கியங்கள் மிகப்பெரும் கடல்கோள் ஒன்று ஏற்பட்டு தமிழ்நிலப் பகுதிகள் பலக்கூறுகளாக பிரிந்து போய்விட்டதாக பதிவு செய்து வைத்திருக்கிறது.  இந்த கடல் கோளினால் லெமோரியா கண்டம் இந்திய நிலப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு விட்டது அல்லது அழிந்துபோய் விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

 கடல் சீற்றத்தால் லெமோரியா கண்டம் அழிந்த பொழுதுதான் இமயமலையும் கங்கைச் சமவெளியும் நிலப்பரப்பிற்கு வந்திருக்க வேண்டும்.  இந்த காலகட்டத்தில் கடல் தாக்கத்திலிருந்து தப்பி பிழைத்த மக்கள் வடக்கு நோக்கி குடிபெயர்ந்திருக்க வேண்டும்.  அப்படி குடிபெயர்ந்து வாழ்ந்த மக்களின் நாகரீக சுவடுகள் தான் சிந்து சமவெளி நாகரீகம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.  வரலாற்று அறிஞர்களை வியப்பிலும் திகப்பிலும் ஆழ்த்தக்கூடிய பல பொருட்கள் சிந்து சமவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   


   பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து வழி முழுவதும் பரவி இருந்த ஒரு பெரும் நாகரீகத்தின் சின்னங்களாக அவைகள் இன்று நமக்கு காட்சி தருகின்றன.  மொகஞ்சதரோ, ஹராப்பா ஆகிய இரு புதை நகரங்களிலும் காணப்படும் கட்டடங்களின் அமைப்பும் நகரங்களின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கிறது.  அந்த காலத்தில் மொகஞ்சதரோ வளமையான நகரமாக விளங்கியதாகவும் பெரும் வெள்ளத்தினால் அந்நகரம் ஏழுமுறை தாக்கப்பட்டு மண்மூடிப் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

  மொகஞ்சதரோவிலும் ஹராப்பாவிலும் ஊருக்கு வெளியே கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன அக்கோட்டைகள் மன்னர்களின் அரண்மனைகளாகவும் படைவீரர்களின் பாடிவீடுகளாகவும் பயிற்சி கூடங்களாகவும் இருந்திருக்க வேண்டும்.  அவைகளில் பெரிய பெரிய நீச்சல் குளங்களும் நேரான சாலைகளும், நெற்களஞ்சியங்களும் அமைக்கப்பட்டிருந்தன.  மத குருமார்களுக்கு தனிதனி குடியிறுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  அந்நகர மக்கள் அழகான மண்பாண்டங்களும் பொம்மைகளும் வெண்கல சிலைகளும் செய்ய கற்றிருந்திருக்கின்றனர். 

  செப்பேடுகள் எழுதும் பழக்கமும் அவர்களிடம் இருந்திருக்கின்றனர்.  அவர்கள் பயன்படுத்திய நாணயங்களிலும் சில பட்டையங்களிலும் சில பாத்திரங்களிலும் இந்து கடவுள்களின் உருவங்கள் செதுக்கப்பட்ட முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  மேலும் சிந்து வழி எழுத்துக்களில் அடிக்கடி ஒரு குறி வருகிறது மூடியில்லாத மண்பாண்டத்தை போன்று அந்த குறி வரையப்பட்டுள்ளது.  அது அரசமரத்தை குறிப்பிடுவதாக சில அறிஞர்கள் குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த ஆய்வு குழவினர் கூறுகிறார்கள்.  இது அரசமரத்தை காட்டும் குறியல்ல மரக்கலத்தை அதாவது படகை சுட்டிக்காட்டும் குறியென்று பின்லாந்து நாட்டை சேர்ந்த அறிஞர்கள் கருதுகிறார்கள்.  அந்த குறியீட்டை நாம் நேரடியாக பார்க்கும் பொழுது அரச மரத்தை காட்டும் குறியாகவே அது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர மரக்கலத்தை காட்டுவதாக தோன்றவில்லை.


  சிந்து வழி நாகரீகத்தில் முன்னூறு வகையான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது.  அதில் ஒரு எழுத்துக்கு கூட இன்று வரை அர்த்தம் கண்டுபிடிக்கபடவில்லை இந்த எழுத்துகள் தவிர பல வித சித்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அந்த சித்திரங்களில் பெருவாரியானவைகள் விலங்குகளும் ஆயுதங்களும் தெய்வங்களும் மனிதர்களும் ஆகும்.  அந்த விலங்கு சித்திரங்களை பார்ப்பவர்கள் வேதத்தில் குறிப்பிடும் யாகங்களில் பலியிடப்படும் விலங்குகளை காட்டுவதாக சொல்கிறார்கள்.  ஆனால் அந்த கூற்றில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.

  காரணம் என்னவென்றால் யானைகளும் காண்டாமிருகங்களும் அந்த ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளன.  எந்த சூழலிலும் இத்தகைய மிருகங்களை வேள்விகளில் பலியிடப்பட்டதாக வேதத்தில் எந்த குறிப்பும் கிடையாது எனவே இந்த முத்திரை சித்திரங்கள் நிச்சயமாக வேதங்களை சார்ந்தது அல்ல என்று துணிந்து கூறலாம்.  இது மட்டும் அல்ல இந்த சித்தரங்களில் வேதங்களில் குறிப்பிடப்படும் தெய்வ உருவங்கள் எதுவுமே வரையப்படவில்லை. 

  மேலும் அந்நகர சுவடுகளில் கிடைக்கும் எல்லாவகையான சமயச்சார்புடைய ஆதாரங்களை திரட்டி பார்க்கும் பொழுது சிந்துவெளி மக்களின் சமய வாழ்க்கைகும் வேதங்களில் குறிப்பிடப்படும் சமய வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக கருதமுடியாது.  ஒன்று அந்த மக்கள் வேதம் சாராத வழிபாட்டை கொண்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது வேதகாலத்திற்கு முற்பட்ட சமயநெறியை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.





  ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறி வந்ததாக ஒரு சாராரும் இல்லை அவர்களும் இந்நாட்டின் பூர்வ குடிகள் தான் என்று ஒரு சாராரும் முடிவே இல்லாமல் வாதாடி வருகிறார்கள்.  இன்னொரு சாரார் திராவிடர்கள் கூட இந்தியாவில் குடியேறியவர்களே தவிர பூர்வ குடிகள் அல்ல என்று கூறுகிறார்கள் எல்லோருமே தங்களது வாதங்களுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்களை தருகிறார்கள்.  அவற்றில் எது சரி எது தவறு என்ற முடிவிற்கு நம்மால் வரமுடியவில்லை காரணம் அனைவரின் தரப்பிலும் கொஞ்சமாவது உண்மையிறுப்பதை நம்மால் உணரமுடிகிறது. 

  ஆனால் இந்த வாதபிரதி வாதங்களில் இந்த மதத்தை பொறுத்த வரையில் அசைக்கமுடியாத ஒரு உண்மையை நாம் பெற முடிகிறது.  அந்த உண்மை என்னவென்றால் வேதங்களுக்கு முன்பே இந்து மதம் இந்த நாட்டின் தாய் மதமாக இருந்திருக்கிறது.  என்பது தான் அது.  எதைவைத்து இந்த முடிவை நான் சொல்கிறேனென்றால் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய கடவுள் உருவங்களில் பல வேதங்களில் குறிப்பிடப்படாதவைகள் இருக்கின்றன.  அது மட்டுமல்லாது அந்த மக்களின் வழிபாட்டு முறைகள் பல வேதக்கருத்துகளுக்கு மாறுபாடுடையதாக இருந்திருக்கின்றது.  அதற்கு பல ஆதாரங்களை நம்மால் கூறஇயலும்.

 சிந்து சமவெளியில் பல இடங்களில் லிங்க உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்த மக்கள் லிங்க வழிபாட்டை மேற்கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று துணிந்து கூறலாம்.  ஆனால் வேதங்களில் லிங்க வழிபாடு என்பது சிறப்பித்து கூறப்படவில்லை.  மாறாக கேலி செய்யும் பாணியிலேயே சில வேத ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.  இவைகளை வைத்து பார்க்கும் பொழுது வழிபட்டவர்களும்  கேலிசெய்பவர்களும் ஒருவராகவே இருப்பார்கள் என்று கூறமுடியாது.  வேதகால மக்கள் சிந்து வழியில் வாழ்ந்தவராக இருந்து பிறகு கங்கை வெளியில் பரவி குடியேறி இருப்பார்கள் ஆனால் சிந்துவெளி சின்னங்களாக எழுத்து முத்திரைகளும் செப்பேடுகளை பொறிக்கும் வழக்கத்தையும் தம்முடனே கொண்டு சென்றிருக்க வேண்டும்.  ஆனால் வேதகால நாகரீகத்தில் இவைகள் முற்றிலுமாகவே இல்லை என்று சொல்லலாம்.


  வேதகால மக்களின் மனித சித்திரத்தையும் சிந்துவெளி மக்களின் மனித சித்திரத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மிகப்பெரும் வித்யாசம் இருப்பது தெரிகிறது.   சிந்துவெளி மனிதனின் உதடுகள் தடித்து பிதுங்கி உள்ளதையும் வேதகால மனித உருவம் அதற்கு மாறுபட்ட வடிவில் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறது.  மொகஞ்சதரோ பகுதியில் கிடைக்கும் களிமண் முத்திரைகளை பசுபதி வடிவிலுள்ள சிவபெருமான் அமைதியான யோக முத்திரையுடன் காணப்படுகிறார்.  ஆனால் வேதத்தில் குறிப்பிடப்படும் ஸ்ரீ ருத்ரன் ரௌத்ர காலத்தில் அதாவது கோபாவேச மூர்த்தியாக காட்டப்படுகிறது.  இது மட்டுமல்லாது பெண் தெய்வ வழிபாடு சிந்துமக்களிடம் போற்றத்தக்க அளவில் இருந்திருக்கின்றது.  ஆனால் வேதங்களில் பெண் தெய்வங்களுக்கு உரிய முக்கியத்துவம் ஆரம்பத்தில் கொடுக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

 சிந்துவெளி மக்கள் தங்களது இறை வழிபாட்டில் கோள்கள், விண்மீன்கள் ஆகிய வான மண்டலங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை வைத்திருந்தார்கள்.  வான சாஸ்திரத்திலும் ஜோதிட சாஸ்திரத்திலும் சிறந்தவர்களாக அம்மக்கள் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் பல கிடைகின்றனர்.  இந்த இரு சாஸ்திரங்கள் அவர்களது வாழ்க்கையில் பின்னி பினைந்திருப்பதை அவர்களுடைய மனித பெயர்களுடன் நட்சத்திரங்களின் பெயர்களை இணைந்து வைத்திருப்பதனால்  நாம் அறிந்து கொள்ளலாம்.  இந்த கூறுகள் அனைத்துமே ஆரம்பகால வேதங்களிள் இல்லையென்றே சொல்ல வேண்டும்.  பிற்காலத்திலேயே வானவியலும் ஜோதிடவியலும் வேதங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

 மேலே சொன்ன காரணங்களை பின்னர் விரிவாக நாம் பேசினாலும் இன்னும் இருக்கின்ற சில வேறுபாடுகளை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவதினால் இந்துமதம் வேதகாலத்திற்கு முற்பட்டது என்பதை இன்னும் தெளிவாக நாம் உணர வழி ஏற்படும்.


  வேதங்களில் பறவைகளையும், விலங்குகளையும் தெய்வத்தன்மை வாய்ந்ததாக சொல்லும் கருத்துகள் ஆரம்ப காலத்தில் இல்லை.  வேதகாலமானது முடிவுக்கு வரும் நேரத்திலேயே அவைகளை புனிதமானதாக கருதும் நிலை எற்பட்டுள்ளது.  அதாவது ஆரம்பகால வேத பாடல்களில் பசுவை புனிதமாக கருதக்கூடிய எந்த குறிப்பும் இல்லாததை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.  சிவனுக்கு எருதுவும் துர்க்கைக்கு சிங்கமும் விஷ்ணுவுக்கு கருடனும் பிரம்மனுக்கு அன்னமும் பிற்காலத்திலேயே வாகனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.  இது எப்படி ஏற்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும்.

 மனிதன் தவிர மற்ற உயிரனங்களும் தெய்வ தன்மையை தங்களோடு வைத்திருப்பதை சிந்து வழி மக்கள் நம்பி பறவைகளையும் விலங்குகளையும் வழிபட்டு இருக்கிறார்கள்.  இந்த வழிபாடானது திடீரென்று அவர்களுக்கு தோன்றியதாக இருக்க வாய்பில்லை.  பல நூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக நம்பி வந்ததையே தங்களது பழக்கத்தில் அவர்கள் வைத்திருக்க வேண்டும். 

  சிந்து பகுதி மண் மேடான பிறகு அதிலிருந்து தப்பி பிழைத்த சில மக்கள் கங்கையோரத்தில் குடியேறியிருக்க வேண்டும்.  பிற்காலத்தில் கங்கை நதி புறத்தில் வேத நாகரீகம் பரவிய போது இந்த மக்களின் வழிபாட்டிலுள்ள கவர்சி மிக்க இந்த அம்சம் வேத விற்பன்னர்களை ஈர்த்து வேதங்களில் இவைகளை பற்றிய குறிப்புகளை ஏற்றியிருக்க வேண்டும்.  அப்படித்தான் வேதத்தின் கடைசி காலத்தில் இவைகள் வந்திருக்க வேண்டுமே தவிர ஆதியிலிருந்து இம்முறை இருந்ததற்கான வாய்ப்பில்லை.  


   வேதங்களில் பானிகள் என்று ஒரு புலத்தினர் குறிப்பிடப்படுகிறார்கள் இவர்கள் வணிகர்கள் என்று காட்டப்படுகிறார்கள்.  இப்பானி மக்கள் வட்டி தொழிலை மேற்கொண்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன.  மேலும் இவர்கள் புதிதான ஒரு வழிபாட்டு முறையை கடைபிடித்ததாகவும் அந்த முறை வேதமுறைக்கு முரணானதாக இருந்ததாகவும் இதனால் வேத நெறி நிற்பவர்களுக்கும் இந்த புலத்தாரருக்கும் அடிகடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதாகவும் க் வேதம் தெளிவாகச் சொல்லுகிறது.  இந்த பானிமக்களே சிந்து வழி மக்களாக இருக்க வாய்ப்புள்ளது.  இவர்களுடன் ஏற்பட்ட பகைமையை பெரிதாகக் கொள்ளாமல் இவர்களிடம் உள்ள நல்ல அம்சங்கள் பொருந்திய வழிபாட்டு முறைகளை வேதங்கள் சுவிகாரம் எடுத்து கொண்டிருக்க வேண்டும்.

 சிந்துவெளி நாகரீகத்தில் மட்டுமல்ல அதற்கும் முந்தைய காலத்திலும் இந்துமதம் இந்த நாட்டில் இருந்துள்ளது பல சர்ச்சைகள் இருந்தாலும் சிந்து நாகரீக காலத்தை கி.மு. 5000 க்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பே அதாவது கி.மு. 90000 ஆண்டிலேயே விநாயகரை வழிபடும் வளக்கம் மக்கள் மத்தியில் இருந்துள்ளது சிந்துமாநிலத்திற்கு அறுகிலுள்ள நௌஸர் என்னும்இடத்தில் சுட்டமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலை 1992 ஆண்டு கண்டெடுக்கப்பட்டது இந்த சிலைக்கு இன்றைய வயது 11 ஆயிரம் வருஷம் மட்டும் தான் இபிகே7712 என பெயர் சுட்டப்பட்ட இந்த விநாயகர் உருவம் தற்போது பாகிஸ்த்தான் அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது


  வேதங்களில் உள்ள சிறப்பான அம்சமே எந்த வகையிலாவது நல்லவற்றை எடுத்து கொள்வதே ஆகும்.  ஆரம்பகால வேத ஸ்லோகங்கள் ருத்ரனை மூலமூர்த்தியாக கருதியது கிடையாது ஆனால் சிந்து வழி மக்களிடமிருந்து பசுபதியை சுவிகரித்துக் கொண்டவுடன் வேதக்கடவுளான ருத்ரனின் நிலையை விட பல மடங்கு உயர்ந்த நிலையில் வேதங்களால் பசுபதி போற்றப்படுகிறார்.  யோக முத்திரைகளும் பெண் தெய்வ வழிபாடும் மரம், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் மேன்மைகளும் அப்படியே வெளியிலிருந்துதான் வேதத்திற்குள் அழைத்துவரப் பட்டிருக்கின்றன அவைகள் தான் இந்து மதத்தின் ஆதிகூறுகள் ஆகும். அதன் விரிவாக்கத்தை அடுத்த அத்யாயத்தில் தெளிவாக பார்ப்போம்.

கடவுள் உருவாக்கிய மதம்

கடவுள் உருவாக்கிய மதம்

,

இந்து மத வரலாற்று தொடர் 1
  ன்பை நிலை நாட்டுவதற்கு உருவானது தான் மதங்களாகும்.  எந்த மதமும் வன்கொடுமையை வலியுறுத்தவில்லை.  ஆனால் மதங்களின் பெயரால் தான் வன்முறைகள் இன்று பரவலாக நடந்து வருகிறது.  அதற்கு காரணம் என்ன?  அன்பை போதிக்கும் மதங்களால் அராஜகங்கள் நிகழ்வது ஏன்?  என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் கிடைக்கும் பதில் ஒன்றுதான்.  மதங்களை தவறுதலாக புரிந்து கொள்வதும் என்மதம் தான் உயர்ந்தது என்று மற்ற மதங்களை ஊதாசினப்படுத்தும் மனப்போக்கும் தான் மத வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது என்ற பதில் கிடைக்கும்.

மத வெறியையும் மத அறியாமையையும் நீக்குவதற்கு என்ன வழி என்று மக்களை நேசிக்கும் மனித நேயமிக்க சிந்தனையாளர்கள் பலரும் தங்களது அறிவாற்றலைக் கொண்டு ஆராய்ந்து வருகிறார்கள்.  அவர்களின் சிந்தனைக்கு உரமாகவும் சீர்திருத்தத்திற்கு வழியாகவும் எனக்கொரு யோசனை தோன்றியது அந்த யோசனையின் விளைவுதான் இந்த தொடர் பதிவாகும் 


 மதப்பிரச்சாரம் என்பது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும்.  ஆனால் அந்த பிரச்சாரம் எந்த நோக்கில் அமைந்திருக்கிறது என்றால் ஒன்றை தாக்கியும் இன்னொன்றை போற்றியும் தான் அமைந்திருக்கிறது.  இதில் தான் சிக்கல்களும் பிரச்சனைகளும் முளைவிடுகின்றன.  எனவே அந்த மதப்பிரச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.  இதில் இன்னொரு விஷயத்தையும் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  பொதுவாக இன்றைய மதப்பிரச்சாரம் என்பது சுய மதத்தினரிடம் அல்லாமல் மாற்று மதத்தினரிடம் தான் அதிகப்படியாக நடத்தப்படுகிறது.

 எனவே காழ்புணர்ச்சி அற்ற வகையிலும் சுய மதத்தினரே தங்களது மதக் கருத்துகளை நன்கு புரிந்துணரும் வகையிலும் நமது நோக்கம் அமைந்திருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களில் புகுந்திருக்கும் வெறியுணர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.  ஆகவே அந்தந்த மத அறிஞர்கள் தங்கள் மக்களுக்கு தம்தமது மதக்கருத்துகளை புரியும் வண்ணம் போதித்து மாற்று மதத்தினரையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களின் மீது பதிந்திருக்கும் வன்முறை என்ற கொடிய பாவம் கழுவப்படும்.

 சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒரு அன்பரை நான் சந்திக்க நேட்டது.  அவர் பல விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கடைசியாக மதசம்பந்தப்பட்ட சில கேள்விகளை என்னிடம் கேட்டார்.  அந்த கேள்விகளில் மிகவும் முக்கியமானது இந்துக்களாகிய நீங்கள் சிலைகளை வழிபடுவது ஏன்?  பல கடவுள்களை நம்புவது ஏன்?  என்பதாகும்.  அவருக்கு நான் இந்துக்கள் உருவ வழிபாட்டை கடைபிடிப்பதன் காரணத்தையும் கடவுள் கொள்கைகளையும் விளக்கமாக எடுத்துச் சொன்னேன்.  அந்த விளக்கங்களில் அவர் எந்த வகையிலும் திருப்தி அடையவில்லை.  பொத்தாம் பொதுவாக கல்லை வணங்குவது தவறு என்பதில் பிடிவாதமாக இருந்தாரே தவிர நான் சொன்ன கருத்துகளை புரிந்து கொள்ள எந்த முயற்சியுமே எடுக்காமல் கண்மூடித்தனமாக தான் பேசுவதையே பிடித்துக் கொண்டு நின்றார்.  இத்தகைய பிடிவாதக் காரர்களிடம் வாதம் செய்வது என்பது மலையின் முன்னால் பேசுவதற்கு ஒப்பானதாகும்.  நமது பேச்சு நம் காதில் விழுமே தவிர மலையை எந்த வகையிலும் பாதிக்காது அதனால் அவரிடம் வேறு சில காரியங்களை பேசி அனுப்பி வைத்து விட்டேன்.  இப்படி மற்றவர்களின் கருத்துகளை காது கொடுத்து கேட்காதவாறு பல மனிதர்கள் உருவாக்கப்பட்டு நடமாட விடப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள் மற்றவர்களின் கருத்துகளை மட்டுமல்ல மன உணர்வுகளையும் புரிந்து கொள்வது இல்லை.


  சரி ஒரு இஸ்லாமியன் இந்து மதத்தை புரிந்து கொண்டு விடுவதினால் பல நன்மைகள் உண்டு என்றாலும் கூட புரிந்து கொள்ளாமல் போவதனால் பெரும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டு விடப்போவதில்லை.  ஆனால் ஒரு இந்து தனது மதத்தை தெரிந்து கொள்ளாமல் போவதனால் நிச்சயம் பல பாதிப்புகள் ஏற்பட்டே தீரும் அந்த பாதிப்புகள் நமது நாட்டின் ஆத்மாவை அழிப்பதாகவே அமைந்து விடும்.

 மிக வேதனையான ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  இந்துக்கள் என்று கூறிக்கொள்ளும் எத்தனை பேருக்கு தங்களது மதத்தைப் பற்றிய அறிவும் தெளிவும் இருக்கிறது.  என்னால் சர்வ நிச்சயமாக அறுதியிட்டு கூறமுடியும் நம்மில் நூற்றுக்கு பத்து பேருக்கு கூட நம் மதத்தைப் பற்றி துளி அளவும் ஞானமில்லை என்று.  சரி நம்மவர்கள் ஞானம் இல்லாமல் போனதற்கு அவர்கள் மட்டும் தான் காரணமா என்று கேட்டால் நிச்சயம் அவர்களை மட்டுமே குற்றவாளிகள் என்று கூறி விட முடியாது.  சமயத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய ஆச்சாயர்களே தங்களது பணிகளை திறம்பட செய்யாத குற்றவாளிகள் என்று கருத வேண்டும்.

 புவியியல், பொறியியல் என்று படிப்பதனால் வேலை கிடைக்கிறது.  வருவாய் வருகிறது.  வயறும் நிறைகிறது.  மதத்தை பற்றிய அறிவை பெறுவதினால் என்ன கிடைத்து விடப்போகிறது உலக வாழ்க்கைக்கு உதவாத மத அறிவு தேவையே இல்லை.  என்று சிலர் நினைக்கிறார்கள் இவர்கள் நிச்சயமாக புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே எனது கருத்தாகும்.  ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆகாரம் மட்டுமே போதுமானது என்றால் மனிதனையும், மிருகத்தையும் சமமான தரத்திலேயே வைத்துவிடலாம்.  மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்தி உயர்த்தி காட்டுவது பகுத்தறிவோடு கூடிய பண்பாட்டு செறிவாகும்.  பண்பாடு தெரியாத எந்த மனிதனும் அமைதியாக வாழ்ந்து விடமுடியாது.  மதம் என்பதும் மனிதனை பண்படுத்தும் பண்பாடு தான்.  இன்னும் சொல்வதென்றால் மதத்திலிருந்து தான் பண்பாடே தோன்றியது எனலாம்.


  கடிவாளம் இல்லாத குதிரை நாலா திசையும் ஓடி ஆடி வீணாக அலைவது போல் ஒழுக்க நெறியில்லாத மனிதனும் தனது வாழ்நாளை வீனாக்கி கொள்கிறான்.  எனவே மனிதன் தான் அமைதியாக வாழவேண்டும் என்ற சுயநல காரணத்திற்காவது மத அறிவை பெற்றே ஆகவேண்டும்.  அப்படி பெற மறுத்தால் காற்று போன போக்கில் காற்றாடி பறந்து கிழிந்து கிடப்பது போல் நமது வாழ்க்கையும் கிழிந்து போய்விடும்.

 நமது ஜனங்கள் மத அறிவை பெறாமல் இருப்பதற்கு அவர்களின் அசட்டை மட்டும் காரணமல்ல ஆச்சாயர்களின் கவனக் குறைவும் காரணம் என்று முன்பே சொன்னேன்.  அது நான் வேடிக்கைகாக கூறியது அல்ல வேதனையோடு கூறியது ஆகும்.  நமது சங்கராச்சாயர்களும், ஜீயர்களும், பட்டர்களும் தங்களது பார்வைகளை விசாலப்படுத்தாமல் ஒரு சிறு குழுக்களின் மீது கவனம் செலுத்தி பெருவாரியான ஜனங்களை தங்களது ஞானத்தால் வழிநடத்தாமல் போனதே மிகப்பெய குற்றமாகும்.  மடாதிபதிகள் என்பவர்கள் மக்களின் பணியாளர்களே தவிர இறைவனின் அவதாரங்கள் அல்ல.  இவர்கள் தங்களை அவதார புருஷர்களாக கருதிகொண்டதனால் ஏற்பட்ட சோகமே நம்மக்களின் தோல்விகளாகும்.  மன்னர்களின் மானியங்களை திருமடங்களின் கருவறைக்குள் பாதுகாத்து வைக்கும் சிறத்தையை விட்டுவிட்டு மதக்கருத்துகளை மன்னவனுக்கு மாடு மேய்க்கும் சின்னவனுக்கும் சொல்லியிருப்பார்களே யென்றால் இன்றைய அவல நிலை ஏற்பட்டிருக்காது.

 கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மத அமைப்புகளில் ஒரு நடைமுறை இருக்கிறது.  அது என்ன வென்றால் தங்களது மதத்தைச் சார்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வரை மதக்கல்வி  அளிப்பது ஆகும்.  அந்த நடைமுறை நமது இந்து மதத்தில் எந்த பகுதியிலும் இல்லை அதனால் தான் நம் மதத்தின் புனித நூல் எது என்று கூட அறியாத பலர் இன்றும் இருக்கிறார்கள்.  இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் வருங்காலத்தில் நம் மதத்தின் அறிவுக் கருவூலங்கள் எது என்பதே தெரியாத வன்னம் அழிந்து போகக் கூடிய துயர நிலை ஏற்பட்டுவிடும்.  இதை மாற்ற உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தே ஆகவேண்டும்.



  சிலர் கேட்கலாம் நமது நாடு முழுவதும் இந்து கோவில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  திருப்பதி, சபரிமலை, வைஷ்ணவி, காசி போன்ற புனித ஸ்தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நகரங்கள் மட்டுமல்லாது கிராமபுறங்களில் கூட ஆன்மீக கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் போன்றவைகள் அதிகத்திருக்கிறது.  நிலைமை இத்தகைய வளர்சி பாதையில் செல்லும் பொழுது மத அறிவு வளர்ந்து தானே இருக்க வேண்டும்.  நூற்றுக்கு பத்துபேருக்கு கூட மத ஞானம் இல்லை என்பது எந்த வகையில் சரியாகும் என்று.

  இவர்கள் கேட்பதில் தவறுகள் இருப்பதாக நான் கருதவில்லை.  ஆனால் இவைகளால் மட்டுமே மதஞானம் பெருகி உள்ளது என்று கூறி விட இயலாது.  ஆலயங்களுக்கு செல்வதும் யாத்திரைகள் மேற்கொள்வதும் கருத்தரங்கங்களை கேட்பதும் ஒரு மனிதனின் சமய அறிவை பெருக்கிவிடும் என்றால் பட்டி தொட்டியெங்கும் பகவத் கீதை பரவியிறுக்கும் பெருவாயான கிறிஸ்துவர்கள் கையில் பைபுளை வைத்துக் கொள்வது கௌரவம் என்று கருதுவது போலானது பகவத் கீதையை வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கும்.

  ஆனால் நிலைமை என்னவென்று நமக்கு தெரியும் மக்கள் இன்று அலகு குத்துவதும், காவடி எடுப்பதும் நெருப்பில் நடப்பதும் தான் சமய வாழ்க்கை என்று கருதும் அறியாமை நிலை மாறியிருக்கும்.  பல கிராமங்களில் சில காட்சிகளை நேரடியாகவே நான் பார்த்திருக்கிறேன் கிறிஸ்துவ மத போதகர்கள் நம் மக்களை பார்த்து நீங்கள் கல்லையும், மண்ணையும் வணங்குகிறீர்கள் அது சாத்தானின் வழிபாடாகும் என்று கேலியும் கிண்டலுமாக பேசுகின்ற பொழுது  நம் மக்களில் பலர் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதையும் கோபத்தால் துடிப்பதையும் பார்த்திருக்கிறேன்.  அவர்களிடம் மட்டும் சரியான சமய அறிவு இருந்திருந்தால் கேலி செய்யும் பாதிரிகளை பார்த்து கத்தோலிக்கே ஆலயங்களிலிருக்கும் சிலைகள் மட்டும் கடவுளா முதலில் உங்களது சிலை வழிபாடுகளை நிறுத்தி விட்டு எங்களை பற்றி பேசுங்கள் என்று காரசாரமாக பதில் சொல்லியிருப்பார்கள்.  ஆனால் பாவம் அவர்கள் அப்படி பயிற்றுவிக்கப்படவில்யே நமது மடாதிபதிகள் அவர்களை பல்லாக்கு தூக்குபவர்களாகத்தானே வைத்திருக்கிறார்கள்.



 இந்த மாதிரியான சிந்தனைகள் எனக்குள் எழுந்து கொண்டு இருந்த பொழுது எனது சீடர்களில் ஒருவரான சிவானந்தத்தின் குழந்தை சிவசங்கரி என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள். “ குருஜி இந்து மதம்னா என்ன”?  என்பதே அந்த கேள்வியாகும்.  இது சாதாரணமான ஒரு குழந்தையின் விளையாட்டு தனமான கேள்வியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அந்த கேள்வியை என்னால் விளையாட்டு தனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  காரணம் நமது மதத்தை பற்றிய அறிவு மக்களிடம் இல்லை மத வல்லுநர்கள் அதை மக்களுக்கு தரவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது இந்து மதம் என்றால் என்ன என்று மக்கள் அறிந்து கொள்ள இதுவரை நாம் செய்தது என்ன என்றெல்லாம் எனக்குள் எத்தனையோ கேள்விகள் எழும்பியது.

 மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சொல்லுவது மிக எளியது.  ஆனால் அப்படி குற்றம் கண்டுபிடிப்பதில் மட்டுமே ஒருவனின் சமூகப்பணி முடிந்து விடுகிறதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.  குறைகளை பற்றி பேசிக்கொண்டிராமல் அவைகளை நிறைகளாக்க முயற்சிப்பவனே சிறந்த மனிதன் என்று எப்போதுமே நான் கருதுவது உண்டு.  அதனால் என்னால் முடிந்த வரை நமது மதத்தை பற்றி எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்து சொல்வது என்று முடிவு செய்ததின் விளைவே இந்த பதிவாகும் .

 எந்த ஒரு புத்தகத்தையும் எழுதுவதற்கு முன்னால் அதை எப்படி ஆரம்பிப்பது என்பது சிக்கலான ஒரு விஷயமாகும் அந்த சிக்கலை நிவர்த்தி செய்து விட்டோம் என்றால் எந்த சிக்கலையும் எதிர்கொண்டு சமாளித்து விடலாம்.  எனவே இந்த தொடரை குழந்தை சிவசங்கரி கேட்ட இந்து மதம் என்றால் என்ன என்ற கேள்வியிலிருந்தே ஆரம்பிக்கலாம்.



  நாம் அனைவரும் இந்துக்கள் நமது மதம் இந்து மதம் என்பது எப்படி நமக்கு தெளிவாகத் தெரியுமோ அதை விட தெளிவாக இந்து மதம் என்ற பெயர் நமக்கு நாம் சூட்டிக் கொண்டது அல்ல.  அந்நியர்கள் நமக்கு தந்த பெயராகும் என்று தெரியும்.  நமது நாட்டிலுள்ள பழைய கால நூல்கள் எதுவும் நமது மதத்தை இந்து மதம் என்ற பெயரில் அழைக்கவே இல்லை.  அவைகள் நமது மதத்தை சனாதன தர்மம் என்ற பெயரிலேயே அழைக்கிறது.  கி.பி. 5-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தத்த சாஸ்திர நூல் ஒன்றே இந்து மதம் என்ற வார்த்தையை முதல் முதலில் பயன்படுத்துகிறது.  அதற்கு முன்பு உள்ள அனைத்து நூல்களும் என்றும் அழியாது நிலைத்திற்கும் வழிமுறை என்ற பொருள் கொண்ட சனாதன தர்மம் என்ற பெயரையே மதத்தை குறிப்பிட பயன்படுத்துகிறது.  நிலைமை இப்படி இருக்க இந்து மதம் என்ற பெயர் எப்போது யாரால் நமக்கு கொடுக்கப்பட்டது என்ற வினா எழும்புவது இயற்கையே ஆகும்.

   சிந்து நதிக்கு கிழக்கு பக்கத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் கிரேக்கர்கள் இந்துக்கள் என்று அழைத்தார்கள்.  சிந்து நதியோர மக்கள் என்றால் அவர்களை சிந்துக்கள் என்று தானே அழைக்க வேண்டும்.  இந்துக்கள் என்று எப்படி அழைக்கலாம் என்று கேட்டால் அதற்கொரு வேடிக்கையான பதில் இருக்கிறது.  பழைய பாரசீக மொழியில் சீ என்ற எழுத்தே கிடையாது.  அவர்கள் சீ என்று துவங்கும் பதங்களை ஹீ என்ற எழுத்திலேயே அழைப்பார்கள் அதனால் தான் சிந்துக்கள் ஹிந்துக்களானார்கள்.

  உலகிலுள்ள பிற மதங்கள் அனைத்திலேயும் ஒரு குறிப்பிட்ட கொள்கை மட்டும் தான் இருக்கும்.  அந்தக் கொள்கையை மட்டுமே சுட்டிக்காட்டி அந்த மதங்களை விவரித்து விடலாம்.  ஆனால் இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் கொண்டது அல்ல.  அதனால் நமது மதத்தை வேற்றுமைகளின் உரைவிடம் என்று கூறிவிடவும் முடியாது.



   நமது ஒருமைபாடு கொள்கை அடிப்படையிலேயோ அமைப்புருவாலோ இல்லை.  அதே நேரம் நம் மதம் ஒரு இறையியல் கோட்பாடுமாகாது.  கடவுள் என்பது இது தான் இப்படித்தான் என்று பிடிவாதம் செய்யும் சுபாவமும் நம் மதத்திற்கு இல்லை.  குருட்டாம்போக்கிலான நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் ஆட்பட்டது அல்ல.  இன்னென்னவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பதும் நமது மதமாகாது.  குறிப்பிட்ட வரையறைகளோ எல்லைகளோ நமக்கு இல்லை.  கடவுளை இல்லை என்பவனும் இந்து தான்.  அவர் உள்ளார் என்று தூக்கி வைத்து ஆடுபவனும் இந்துதான்.  வேதங்களை மறுத்தாலும் ஏற்றுக் கொண்டாலும் அவன் இந்து தான்.  உருவ வழிபாடு மடத்தனமானது என்பவனும் சிலைகளின் கலைகளில் இறைவனை கானுகிறேன் என்பவனும் நமது மதத்தை சார்ந்தவனாகத் தான் கருதப்படுகிறான்.

 இந்து மதம் எந்த மதத்திலேயும் குற்றம் குறைகளை கண்டுபிடித்து கேலி பேசும் சுபாவம் கொண்டது அல்ல.  விண்ணிலிருந்து விழுகின்ற ஒவ்வொரு மழைதுளியும் எப்படி தூய்மையானதோ, நதிகள் எல்லாம் பல இடங்களில் தோன்றினாலும் எப்படி அனைத்தும் கடலில் போய் சங்கமிக்கிறதோ அதே போலவே எல்லா மதங்களும் புனிதமானவைகள் தான்.  அனைத்து மதங்களும் இறைவனிடம் மனிதனைக் கொண்டு சேர்ப்பவைகள் தான் என்று உயரிய கோட்பாடுகளை கொண்டது தான் இந்து மதம்.

எவனாவது தன்னை வெட்ட வந்தவனை சாகடிக்க முயற்சி செய்தவனை மார்போடு அனைத்து நீயும் என் சகோதரன் தான் என்று கூறுவானா அப்படி கூறுகிறவன் எவனாக இருந்தாலும் மனித நிலையிலிருந்து புனித நிலையில் இருப்பவனாகவே கருதப்படுவான் அல்லவா.  இந்து மதமும் அப்படித் தான் தன்னை அழிக்க வந்த தனது அஸ்தி வாரத்தையே ஆட்டம் காட்ட வந்த புத்த மதத்தை தனது ஒரு பிரிவாகவே கருதி கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக ஏற்று தமதாக்கிக் கொண்ட பெருந்தன்மை நம் மதத்திற்கு மட்டும் தான் உண்டு.


  நம் மதம் எப்போதும் தான்தான் உயர்ந்தது என்று பெருமையடித்து கொண்டது இல்லை.  தனது குருமார்கள் மட்டும் தான் இறைவனின் தூதர்கள் என்று வீண் ஜம்பம் பேசியது இல்லை.  தனது கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் மட்டும் தான் இறைவனின் குழந்தைகள் மற்றவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று பேதம் காட்டியது கிடையாது.  பொதுவாக இந்து மதத்தை பற்றி சுருக்கமாக சொல்லுவது என்றால் இது வெறும் மதம் மட்டுமல்ல பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியாக உள்ளது என்றே சொல்லவேண்டும்.


 மற்ற மதங்கள் இன்ன இடத்தில் இன்னாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்லிவிடலாம்.  ஆனால் இந்து மதம் தானாகவே மெல்ல மெல்ல வளர்ந்து பரவி நிற்கும் ஜீவசக்தியாகும்.  மற்ற மதங்களை தார்சலைக்கு ஒப்பிட்டால் நம் மதத்தை ஒற்றையடி பாதைக்கு ஒப்பிடலாம்.  தார்சாலையை எந்த அளவு மக்கள் பயன்படுத்துகிறார்களோ அந்த அளவு அது பழுதடைந்து காலத்தால் மறைந்துபோய் விடும்.  ஒற்றையடி பாதை நாம் எந்த அளவு பயன்படுத்துகிறோமோ அந்த அளவு பண்படும் உறுதிபடும் காலத்தால் இயற்கை மாற்றங்களால் கூட அழியாமல் நிலைத்து நிற்கும்.

சித்தர் போகர் ஜீவசமாதி - பழனி





பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருகோயிலின் உள்ளே தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது சித்தர் போகரின்  ஜீவசமாதி.திருநந்தி தேவரே பல்வகை பிறப்புற்று பின் போகராக தோன்றினார் என்பர்.இவரது காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு.தனது சீடர் புலிப்பாணி சித்தருடன் பழனி மலையில் மேல் தான் அமைத்த திருக்கோயிலின் கண் நவபாஷான கட்டினால் தண்டாயுதபாணி சுவாமியின் அருள் திருமேனியை நிறுவினார்.ஆண்டவன் வலக்கரத்தில் உள்ள தண்டம் ஞானத்தின் சின்னமாக கருதபடுகிறது. இதுவே போகர் ஜீவ சமாதி அடைந்த இடம். இங்கு இன்றும் போகர் வழிபட்ட அருள்மிகு புவனேஸ்வரி அம்மை, மரகதலிங்கம் , வலம்புரி சங்கு ஆகியவற்றை காணலாம். இச்சன்னதியில் இருந்து தண்டாயுதபாணி திருவடி நிலைக்கு ஒரு சுரங்க பாதை உள்ளது. கடைசியாக இதன் வழியாக சென்ற போகர் திரும்பாமல் இதனுள்  அமர்ந்துவிட்டார் என்பர் .



அவருக்கு பின் அவரது சீடர் புலிப்பாணி சித்தர் அவரது பணிகளை தொடர்ந்து அங்கு செய்து வந்தார் .அவரது ஜீவ சமாதி பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. புலிப்பாணி ஆஸ்ரம் என்று இன்றும் அந்த இடம்  அவரது கருவழி பரம்பரையினர் வழிபட்டு வரப்படுகிறது .மேலும் புலிப்பாணி பரம்பரையினர் தான் இன்றும் பழனி மலையின் மேல் அமைந்துள்ள போகர் சமாதியில் பூஜைகள் செய்து வருகின்றனர் .

சிதார்

சித்தர்கள் வரலாறு



 இம்மண்ணுலகில் பிறந்த உயிரினங்களில் தலைமையான உயிரினமே மனித இனம். இந்த மணீசர்களோடு பதினெண் சித்தர்கள் உறவு கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்…. என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.
குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:1.     பதினெட்டாம்படிக் கருப்புகள்
2.     நவகோடி சித்தர்கள்
3.     நவநாத சித்தர்கள்
4.     நாத சித்தர்கள்
5.     நாதாந்த சித்தர்கள்
6.     வேத சித்தர்கள்
7.     வேதாந்த சித்தர்கள்
8.     சித்த சித்தர்கள்
9.     சித்தாந்த சித்தர்கள்
10.     தவ சித்தர்கள்
11.     வேள்விச் சித்தர்கள்
12.     ஞான சித்தர்கள்
13.     மறைச் சித்தர்கள்
14.     முறைச் சித்தர்கள்
15.     நெறிச் சித்தர்கள்
16.     மந்திறச் சித்தர்கள்
17.     எந்திறச் சித்தர்கள்
18.     மந்தரச் சித்தர்கள்
19.     மாந்தரச் சித்தர்கள்
20.     மாந்தரீகச் சித்தர்கள்
21.     தந்தரச் சித்தர்கள்
22.     தாந்தரச் சித்தர்கள்
23.     தாந்தரீகச் சித்தர்கள்
24.     நான்மறைச் சித்தர்கள்
25.     நான்முறைச் சித்தர்கள்
26.     நானெறிச் சித்தர்கள்
27.     நான்வேதச் சித்தர்கள்
28.     பத்த சித்தர்கள்
29.     பத்தாந்த சித்தர்கள்
30.     போத்த சித்தர்கள்
31.     போத்தாந்த சித்தர்கள்
32.     புத்த சித்தர்கள்
33.     புத்தாந்த சித்தர்கள்
34.     முத்த சித்தர்கள்
35.     முத்தாந்த சித்தர்கள்
36.     சீவன்முத்த சித்தர்கள்
37.     சீவன்முத்தாந்த சித்தர்கள்
38.     அருவ சித்தர்கள்
39.     அருவுருவ சித்தர்கள்
40.     உருவ சித்தர்கள்

சித்தர்கள்

சித்தர்கள் என்பவர்கள் யார்
வெந்ததைத் தின்றுவிட்டு வேளை வந்தால் சாகின்ற
பிறவி அல்ல—இந்த சீவன்
சர்வம் சிவமயம் சிவாய நமக‌
பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் – அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.
நன்றி :http://karisalkaran.blogspot.com
சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் அல்ல. “மெய்ப்புலன் காண்பது அறிவு” என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.
சாதி சமயம் சாத்திரம் சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.
சித்தர்களை புலவர்கள்,பண்டாரங்கள் பண்டிதர்கள் சன்னியாசிகள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஓதுவார்கள் கலைஞர்கள் கவிஞர்கள் அரசர்கள் மறவர்கள் ஆக்கர்கள் புலமையாளர்கள் அறிவியலாளர்கள் பொது மக்கள்ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில்இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் “ஆத்மன்”, சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன்ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும். சித்தர்களின் கொள்கை பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
சரி சித்தர்களை காண்போமா
முதலில் பதினெட்டு சித்தர்களின் பட்டியல்களை பார்ப்போமே
1. திருமூலர். 2. போகர் 3. கருவூர்சித்தர் 4. புலிப்பாணி 5. கொங்கணர் 6. மச்சமுனி 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் – மதுரை. 8. சட்டைமுனி சித்தர் 9. அகத்தியர் 10. தேரையர் 11. கோரக்கர் 12. பாம்பாட்டி சித்தர் 13. சிவவாக்கியர் 14. உரோமரிசி 15. காகபுசுண்டர். 16. இடைக்காட்டுச் சித்தர் 17. குதம்ப்பைச் சித்தர் 18. பதஞ்சலி சித்தர்
தி ரு மூ ல ர்
சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.
செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.
பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.
அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை (பசுக்கள் என்று பொருள் கொள்ளவேண்டும், அதனால் தான் நமது தமிழ்நாடு அரசாங்கமும் தனது பால் உற்பத்திக்கு “ஆவின் பால்” என்று பெயர் வைத்தது). மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.
பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.
மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.
சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். திருமூலர் திருமந்திரத்தில் மூன்று அதிமுக்கியமான வாக்கியங்களை, இன்றளவும் நாம் பயன்படுத்தும் விதமாக அருள்ளியுள்ளார், அவையாவன
1) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
2) யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
3) அன்பே சிவம்
ஆகியவைகளே ஆகும்.
திருமந்திரத்தில் ஐந்து கரத்தினை என்று தொடங்கும் விநாயகர் வணக்க பாடல் தற்காலத்தில் தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது, அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும், இலக்கியங்களையும், நூல்களையும் தொண்டங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்று போற்றபடுகிற பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்த பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது கொண்டுவந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயற்று பகுதி இப்படி தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதற்கு சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கலாந்தில் இன்று அருங்காட்சியத்திலும் ஒன்றாக சாட்சி கூறுகிறது.
இவரது திரு நூலுக்கு தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், நம் மனித ஸ்தூல சரீரத்துக்கு தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால், பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்று வழங்கப்பட்டது.
இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்தி கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது. கிழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது
1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 80002. திருமூலர் சிற்ப நூல் – 10003. திருமூலர் சோதிடம் – 3004. திருமூலர் மாந்திரிகம் – 6005. திருமூலர் சல்லியம் – 10006. திருமூலர் வைத்திய காவியம் – 10007. திருமூலர் வைத்திய கருக்கிடை – 6008. திருமூலர் வைத்திய சுருக்கம் – 2009. திருமூலர் சூக்கும ஞானம் – 10010. திருமூலர் பெருங்காவியம் – 150011. திருமூலர் தீட்சை விதி – 10012. திருமூலர் கோர்வை விதி – 1613. திருமூலர் தீட்சை விதி – 814. திருமூலர் தீட்சை விதி – 1815. திருமூலர் யோக ஞானம் – 1616. திருமூலர் விதி நூல் – 2417. திருமூலர் ஆறாதாரம் – 6418. திருமூலர் பச்சை நூல் – 2419. திருமூலர் பெருநூல் – 3000
போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.
திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார், பின்னர் வந்த
பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சிதார்

பதினெட்டுச் சித்தர்கள் - About 18 Siddas

பதினெட்டுச் சித்தர்கள்
தென்னிந்தியாவில் முற்காலத்தில் இறையுணர்வில் முழுமையடைந்து, உயரிய இறைநிலை எய்தியவர்கள்.
தென்னிந்தியாவில் முற்காலத்தில் இறையுணர்வில் முழுமையடைந்து, உயரிய இறைநிலை எய்திய, மருத்துவம், ரசாயனம், இயற்கை விஞ்ஞானம், தத்துவம் போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கிய பதினெட்டு மகான்களை, பதினென் சித்தர்கள் என்று அழைக்கிறோம்.
இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. எனினும், முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர்.
பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான குதம்பைச் சித்தர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் மட்டும் தான் சித்தர்களா?
பதினென் சித்தர்கள் சமாதி அடைந்த இடங்கள் பெரும்பாலும் இன்றையத் தமிழ்நாட்டில் உள்ளது. சித்தர் பாடல்கள் என்றழைக்கப்படுபவை அனைத்தும் தமிழ் பாடல்களே. ஆனால் இந்தச் சித்தர்கள் அனைவரும் தமிழர்கள் என்று கூறமுடியாது. இவர்கள் எண்ணங்களைக் கடந்த உயர்நிலையை எட்டியவர்கள். மொழி, இன பாகுபாடுகளுக்குள் அடைபடுபவர்கள் அல்ல. இவர்களுடைய ரிஷிமூலமும் அறியப்படவில்லை. மேலும் தங்களுடைய இறையுணர்வால், உலகிலுள்ள எந்த மொழியிலும் உடனடியாக தம் கருத்துக்களை இவர்களால் வெளிப்படுத்த முடியும், என்று நம்பப்படுகிறது.
உதாரணமாக, போகர் இடையில் சீனாவிற்குச் சென்று அங்குள்ள மக்கள் இறைவன்பால் மனத்தை ஈடுபடுத்தப் பணியாற்றியதாக வரலாறு உண்டு. ராமதேவர், யாக்கோபு (Jacob) என்ற பெயரில் மெக்காவில் சில வருடங்கள் இறைத் தொண்டு புரிந்ததாகவும் கூறப்படுகிறது. திருமூலர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்றும் குறிப்புகள் உண்டு. கோரக்கரின் முழுப்பெயர் கோரக்நாத். ராமாயணத்தை வட மொழியில் எழுதிய, உலகிற்கு முதன்முதலில் அளித்த, வால்மீகியும் சிலர் கூற்றுப்படி பதினென் சித்தர்களில் ஒருவர்.
புரட்சி:
பிறப்பினால் வரும் சாதித் தீட்டுக்கள், சடங்குகள், சிலை வழிபாடு, கோயில் வழிபாடு, போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றில் உள்ள தவறுகள் பற்றி தெளிவான ஆணித்தரமான கருத்துக்களை முதன்முதலில் சித்தர் பாடல்களில் தான் பார்க்கிறோம். இதனாலேயே ஆச்சாரமான இந்துக்கள் சித்தர் பாடல்களை ஒதுக்கியதாக சித்தர் வரலாற்றை ஆராய்ந்த ஜ்வெலபில் (Zvelebil) குறிப்பிடுகிறார்.
பரிபாஷை:
சித்தர் பாடல்களில் இறைவனை உணர்தல் பற்றிய பல விபரங்களைப் பரிபாஷைகளாக (மறைந்திருக்கும் பொருளாக) வைத்துள்ளனர். இதனால் சாதாரண மனிதனுக்கும், இறையுணர்வு நிறைந்தவர்களுக்கும் ஒரே சமயத்தில் எட்டும் படியாக இந்தப் பாடல்கள் உள்ளது. தற்போது கிடைக்கும் சித்தர் பாடல் திரட்டுகளில் முதன்மையான 'பெரிய ஞானக் கோவை', ராமலிங்க முதலியாரால் 1899 ஆண்டில் வெளியிடப்பட்டது.
பதினெட்டுச் சித்தர்கள் யார்?
பதினெட்டுச் சித்தர்களின் பெயர்கள், சமாதியான இடம், இவர்களுடைய குரு, சிஷ்யர்கள் போன்ற பல விபரங்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்