- ஊற வைத்த பச்சை பட்டாணி: 1 கப்
- முளைக்கட்டிய பச்சைப் பயிறு: 1/2 கப்
- இஞ்சி : 1 பெரிய துண்டு
- பச்சை மிளகாய் : 1
- மல்லித்தழை
- உப்பு: தேவையான அளவு
- தேங்காய் துருவியது : 2 மேஜைக்கரண்டி
- கடுகு: தாளிக்க
- கருவேப்பிலை:1 கொத்து
- பெருங்காயம் : 1 பின்ச்
- பச்சை பட்டாணி, பச்சைப்பயிறு இரண்டையும் குக்கரில் உப்பு,போதுமான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- இஞ்சி, பச்சை மிளகாய் மிக்சியில் ஒரு சுத்து சுத்தி அரைக்கவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை,பெருங்காயம்,அரைத்த பச்சைமிளகாய் இஞ்சி கலவை, கொத்தமல்லி தழை,உப்பு சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி தேங்காய் சேர்த்து சிறிது வதக்கி வேகவைத்த பயிறு வகைகளைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கி வைக்கவும்.
- சுவையான கிரீன் சுண்டல் தயார்.
No comments:
Post a Comment