Wednesday, October 24, 2012

பச்சை பட்டாணி சுண்டல்

  • ஊற வைத்த பச்சை பட்டாணி: 1 கப்
  • முளைக்கட்டிய பச்சைப் பயிறு: 1/2 கப்
  • இஞ்சி : 1 பெரிய துண்டு
  • பச்சை மிளகாய் : 1
  • மல்லித்தழை
  • உப்பு: தேவையான அளவு
  • தேங்காய் துருவியது : 2 மேஜைக்கரண்டி
  • கடுகு: தாளிக்க
  • கருவேப்பிலை:1 கொத்து
  • பெருங்காயம் : 1 பின்ச்





  • பச்சை பட்டாணி, பச்சைப்பயிறு இரண்டையும் குக்கரில் உப்பு,போதுமான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய் மிக்சியில் ஒரு சுத்து சுத்தி அரைக்கவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை,பெருங்காயம்,அரைத்த பச்சைமிளகாய் இஞ்சி கலவை, கொத்தமல்லி தழை,உப்பு சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி தேங்காய் சேர்த்து சிறிது வதக்கி வேகவைத்த பயிறு வகைகளைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கி வைக்கவும்.
  • சுவையான கிரீன் சுண்டல் தயார்.

மசாலா பட்டாணி

  • புடலங்காய் - 2
  • உருளைக்கிழங்கு - 1
  • பட்டாணி - 1/4 கப்
  • தக்காளி - 1
  • பெரிய வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி - சிறிதளவு
  • கறிவேப்பிலை - 1கொத்து
  • கொத்துமல்லி - 2 ஸ்பூன்
  • மஞ்சள் - 1/2 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • கடுகு - 1/4 ஸ்பூன்
  • எண்ணெய் - 3 ஸ்பூன்
  • உப்பு




  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன் சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள், தக்காளி சேர்த்து வதக்கி வேகவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து கிளறவும்.
  • புடலங்காயை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கி, மசாலாவை உள்ளே வைக்கவும்.
  • பின்னர் புடலங்காயை 15 நிமிடம் வேகவைத்து பரிமாறவும்.

அவரைக்காய் மசாலா

  • பட்டை அவரைக்காய் - 200 கிராம்
  • மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • மல்லி இலை - சிறிது
  • அரைக்க:
  • தேங்காய் துண்டு - ஒன்று(சிறியது)
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • தாளிக்க:
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • உளுந்து - அரை தேக்கரண்டி
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • பச்சைமிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி



 அவரைக்காயை சிறியதாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் நறுக்கி வைக்கவும்  தேங்காய், சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.  அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.  அரைத்த மசாலாவை போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கி அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டவும். அதில் அவரைக்காய், உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும். 
தண்ணீர் வற்றி காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான அவரை மசாலா ரெடி

அவரைக்காய் பொரியல்

  • பட்டை அவரைக்காய் - நூறு கிராம்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • முட்டை - ஒன்று
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • கடுகு - சிறிது


 அவரைக்காய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி தேவையானவற்றை எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெடித்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றி நன்றாக அவரைக்காய் வெந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
முட்டை அவரைக்காயில் நன்றாக படுமாறு எல்லா புறமும் பிரட்டி விட்டு வேக வைக்கவும்.
முட்டை அவரைக்காயுடன் ஒட்டி உதிரியாக வந்ததும் அடுப்பை நிறுத்தி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.