
தேவையான பொருட்கள்:-
துவரம் பருப்பு – 50 கிராம்
காளான் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 5 கிராம்
மிளகு, சீரகம் – 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – சிறிதளவு
கிராம்பு – 3
சோம்பு – தாளிப்பதற்கு
வாசனைப்பட்டை, பிரிஞ்சி இலை,
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:-
முதலில் துவரம் பருப்பை நன்கு வேக வைத்துக் கடைய வேண்டும்.
பருப்பு வேகும் பொழுதே ஒரு லேசான வெள்ளைத் துணியில் 10 மிளகுடன் சீரகத்தை லேசாகப் பொடி செய்து முடிந்து போட்டு விட வேண்டும்.
பிறகு இத்துடன் காளானைப் போடுவதுடன் வெங்காயத்தை உரித்து அப்படியே முழுசாகப் போட்டு விட வேண்டும்.
பச்சை மிளகாயை லேசாகக் கீறிப்போட்டு மஞ்சள் பொடியும் சேர்க்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் நன்கு வேக விட வேண்டும்.
இவை நன்கு வெந்ததும், வாணெலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வாசனைப்பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்க வேண்டும்.
கிராம்பைத் தட்டிப்போட்டு, தேவையான உப்புச் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.
இறக்கி வைக்கும் பொழுது 1 ஸ்பூன் நெய் விட வேண்டும்.
No comments:
Post a Comment