Saturday, January 1, 2011

முருங்கைக்கீரை சாப்பாடு

தேவையான பொருட்கள்



முருங்கைக்கீரை -3கப்
சாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ
தேங்காய் பூ- 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மாசி பொடி-1 தேக்கரண்டி


மிளகாய் வற்றல் - 3
சீரகம் -அரைஸ்பூன்
சோம்பு-அரைஸ்பூன்
அரிசி-2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு


சாதம்-1கப்
எலுமிச்சை சாறு -2 சொட்டு
முட்டை-2
மிளகு தூள்-1/2 தேக்கரண்டி

முதலில் அரிசியை நன்கு பொரித்து எடுக்கவும்,அதனை போல் மிளகாய் வற்றல்,சீரகம்,சோம்பு போட்டு வருத்து கொறுகொறுப்பாக பொடித்துக்கொள்ளவும்


முதலில் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் ஊற்றி நன்கு கழுகிகொள்ளவும்
அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதங்க விடவும்.

அதில் கீரையை போட்டு வேகவிடவும்

பின் தேங்காவை போட்டு வதக்கவும்

சிறிது தண்ணீருடன் இருக்கும் போதே கீரைப்பொடி சேர்த்து நன்கு கிளறி விடவும்

அதனுடன் வேகவைத்த சாதத்தை போட்டு நன்கு கிளரவும் மாசிப்பொடி போட்டு கிளரவும் .
பின் முட்டைகளை உடைத்து அடித்து வைத்து கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றி அடித்து வைத்திருக்கும் முட்டைகளை உப்பு மிளகு தூள் ஊற்றி கிளறி விடவும்.


கீரையுடன் முட்டையும் கலந்து வரும் வரை கிளறிவிடவும்விருப்பம் இருந்தால் எலுமிச்சைசாறு ஊற்றலாம்

சுவையான கீரை சாதம் ரெடி

No comments:

Post a Comment