புரோட்டா என்றாலே மைதாவில் செய்த உணவு உடலுக்கு ஆரோக்கியம் இல்லாதது என்று பலர் கருதுவதுண்டு. அனால் அதே புரோட்டவை காய்கறிகள் ஸ்டஃப் செய்து ஆரோக்கியமானதாக மாற்றி விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி இது.
செய்முறை
தேவையானவை:
மைதா மாவு - 2 கப்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைகேற்ப
உள்ளே ஸ்டஃப் செய்யும் பூரணத்துக்கு:
மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - ஒரு கப்,
நீளவாக்கில் நறுக்கிய கேரட் - அரை கப்,
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4,
பூண்டு (விருப்பப்பட்டால்) - 4 பல்,
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்,
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்,
முளைப்பயறு - ஒரு கைப்பிடி.
செய்முறை: எண்ணெய் காயவைத்து, பூரணத்துக்கு கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேருங்கள். 3 நிமிடம் வதக்கி இறக்குங்கள். இது தான் புரோட்டாவுக்குள் ஸ்டஃப் செய்யும் பூரணம்.
இனி மைதாவை உப்பு, சிறிது எண்ணேய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி, அதன் நடுவில் பூரணக் கலவையை நிரப்புங்கள். பக்கவாட்டில் மடித்து, சதுர வடிவமாக்கி கொள்ளுங்கள். தோசைகல்லில் போட்டு, எண்ணேய் ஊற்றி சுட்டெடுங்கள்.
முயற்சி செய்து பாருங்கள்.
டிப்ஸ்: ஸ்டஃப்டு புரோட்டா நடுவில் கனமாகவும், ஓரத்தில் மெல்லிதாகவும் இட்டு நடுவில் ஃபில்லிங்கை வைத்து தேய்த்தால் ஃபில்லிங் நன்கு பரவி இருக்கும்.
No comments:
Post a Comment